செய்திகள்

தெற்கு சூடானில் தென் ஆப்பிரிக்கருக்கு தூக்கு தண்டனை

Published On 2018-02-24 05:18 GMT   |   Update On 2018-02-24 05:18 GMT
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ உயர் அதிகாரிக்கு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜூபா:

தெற்கு சூடான் நாட்டின் முன்னாள் துணை அதிபர் ரீக் மச்சார் ஆவார். இவர் அங்கு கிளர்ச்சி தலைவர் ஆகி உள்ளார். இவரது படைகள், அரசு படைகளுடன் 2013-ம் ஆண்டு முதல் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றன.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ராணுவ உயர் அதிகாரி வில்லியம் என்ட்லே (வயது 55), தெற்கு சூடான் உள்நாட்டுப்போரில் ரீக் மச்சாருக்கு ஆலோசனைகளும், அறிவுரைகளும் கூறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அவர் மீது ஜூபா நகரில் உள்ள கோர்ட்டில் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு சதி செய்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, வில்லியம் என்ட்லே மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என கருதி, அவருக்கு மரண தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு அளித்தது.

அவரை தூக்கில் போட்டு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது. #Tamilnews
Tags:    

Similar News