செய்திகள்

சிக்கன் தட்டுப்பாட்டால் பிரிட்டனில் நூற்றுக்கணக்கான கே.எப்.சி உணவகங்கள் மூடல்

Published On 2018-02-20 11:11 GMT   |   Update On 2018-02-20 11:11 GMT
சிக்கன் தட்டுப்பாடு காரணமாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உணவகமான கே.எப்.சி, பிரிட்டனில் உள்ள தனது நூற்றுக்கணக்கான கிளைகளை மூடியுள்ளது. #KFC
லண்டன்:

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல உணவகமான கே.எப்.சி உலகம் முழுவதும் பல ஆயிரம் கடைகளை வைத்துள்ளது. இங்கு விற்பனை செய்யப்படும் சிக்கன் வகைகள் வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து இழுக்கக்கூடியது ஆகும். இந்நிலையில், பிரிட்டனில் உள்ள அனைத்து கே.எப்.சி கிளைகளுக்கும் ஜெர்மனியைச் சேர்ந்த டி.எச்.எல் நிறுவனம் சிக்கன் சப்ளை செய்து வருகிறது.

இந்நிலையில், சில நாட்களாக குறைவான அளவே சிக்கன் சப்ளை செய்யப்பட்டு தற்போது முற்றிலும் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளதால், 700 முதல் 900 வரையிலான கே.எப்.சி கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நிலைமை சமாளிக்க வேறு இடங்களில் இருந்து சிக்கன் கொள்முதல் செய்ய முடியும். ஆனால், தரமே பிரதானம் என்பதால் நாங்கள் யோசிக்க வேண்டியதுள்ளது என கே.எப்.சி நிறுவனம் கூறியுள்ளது.

நிலைமையை சரிசெய்ய போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக டி.எச்.எல் நிறுவனம் தெரிவித்துள்ளது. #KFC #TamilNews
Tags:    

Similar News