செய்திகள்

அதிபர் பதவி விலக வலியுறுத்தி காங்கோ நாட்டில் போராட்டம் - துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி

Published On 2018-01-22 06:52 GMT   |   Update On 2018-01-22 06:52 GMT
காங்கோ அதிபர் ஜோசப் கபிலா பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Congo #CongoPresident #JosephKabila
சின்ஷாசா:

ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காங்கோ நாட்டின் அதிபராக ஜோசப் கபிலா பதவி வகித்து வருகிறார். இவரது பதவிக்காலம் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவடைந்து விட்டது.

ஆனால் அவர் தேர்தல் நடத்தாமல் தொடர்ந்து பதவியில் நீடித்து வருகிறார். அவர் பதவி விலக வலியுறுத்தி காங்கோ நாட்டில் தலைநகர் கின்ஷாசாவில் பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தை அடக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள். அதை தொடர்ந்து போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

அதில் குண்டு பாய்ந்து 6 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இப்போராட்டத்தை நாட்டின் சக்திமிக்கதாக கருதப்போடும் கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயம் நடத்துகிறது. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். #Congo #CongoPresident #JosephKabila
Tags:    

Similar News