செய்திகள்

சர்வதேச பொருளாதார மாநாட்டில் யோகா பயிற்சி வகுப்பு - பிரதமர் மோடியுடன் 2 ஆசிரியர்கள் பயணம்

Published On 2018-01-20 06:14 GMT   |   Update On 2018-01-20 06:14 GMT
சுவிட்சர்லாந்தில் நடைபெறும் சர்வதேச பொருளாதார மாநாட்டில் யோகா பயிற்சி வகுப்பு நடத்துவதற்காக பிரதமர் மோடியுடன் 2 ஆசிரியர்கள் பயணம் மேற்கொள்கின்றனர்.

டாவோஸ்:

சுவிட்சர்லாந்தில் ஆல்ப்ஸ் பனிமலை பகுதியில் உள்ள டாவோஸ் நகரில் உலக பொருளாதார மாநாடு அடுத்த வாரம் நடைபெறுகிறது. அதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மிக உயிரிய வர்த்தகர்கள் வங்கி அதிகாரிகளும் பங்கேற்கின்றனர். அதை தொடர்ந்து இந்தியாவின் சார்பில் பிரதமர் மோடியுடன் அரசு அதிகாரிகள் 60 பிரபல கம்பெனிகளின் தலைமை நிர்வாக அதிகாரிகள், மற்றும் வங்கி அதிகாரிகள் செல்கின்றனர்.

டாவோஸ் சர்வதேச பொருளாதார மாநாட்டில் இந்தியாவின் புராதன யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. அதற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் 2 யோகாசன பயிற்சி ஆசிரியர்களும் பயணம் மேற்கொள்கின்றனர். இத்தகவலை வெளியுறவு துறை அமைச்சகத்தின் (பொருளாதார தொடர்பு) செயலாளர் விஜய் கோகலே தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும் போது இந்த மாநாட்டின் போது சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட்டுடன் பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்துகிறார். அதே நேரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவது குறித்த தகவலை வெளியிடவில்லை.

Tags:    

Similar News