செய்திகள்

இந்தியா, ரஷ்யா, சீனா உடன் இணைந்து செயல்படுவது நல்ல விஷயம் - டொனால்ட் டிரம்ப்

Published On 2018-01-11 09:57 GMT   |   Update On 2018-01-11 09:57 GMT
இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயல்படுவது நல்ல விஷயம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். #USA #DonaldTrump

வாஷிங்டன்:

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் இணைந்து செயல்படுவது நல்ல விஷயம். கெட்ட விஷயம் அல்ல. சக்தி வாய்ந்த ராணுவம், எண்ணெய் வளம் ஆற்றலை அமெரிக்கா பெற்றிருக்கிறது. ஆனால் முந்தய அரசு அத்தகைய ராணுவத்தை கொண்டிருக்கவில்லை. 

நாங்கள் உலகில் பல நாடுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். பிற நாடுகளுடனான நட்புறவை நன்றாக பாதுகாத்து வருகிறோம் என நினைக்கிறேன். நான் இன்று காலை கூட தென்கொரிய அதிபர் மூன்-உடன் இரு நாட்டு உறவுக் குறித்து பேசினேன். நிறைய நன்மைகள் நடைபெற இருக்கின்றன. என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.



ரஷ்யா உடனான உறவை மேம்படுத்தி வருவதாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் டொனால்டு டிரம்ப் இவ்வாறு தெரிவித்தார். 

இந்த செய்தியாளர் சந்திப்பின் போது, முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும், அதிபர் தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டனையும் டிரம்ப் விமர்சித்தார். #USA #DonaldTrump 
Tags:    

Similar News