செய்திகள்

பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை: இந்திய டாக்டருக்கு 10 மாதம் சிறை

Published On 2018-01-05 05:25 GMT   |   Update On 2018-01-05 05:25 GMT
அமெரிக்காவில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக இந்திய டாக்டருக்கு 10 மாதம் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் டேட்டன் குழந்தைகள் நல மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றியவர் அருண் அகர்வால் (வயது 40). இந்தியர். இவர் 2013-2015 ஆண்டுகளில் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த 2 பெண் நோயாளிகளை தகாத முறையில் தொட்டு, பாலியல் ரீதியில் தவறாக நடந்து கொண்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் புகார் எதுவும் செய்யவில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்களின் புகாரின்பேரில், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உடனே அவர் அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பி வந்து விட முயற்சித்தபோது, கைது செய்யப்பட்டார். அவர் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின்போது, அவர் தன் மீதான பாலியல் தொல்லை குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் குற்றவாளி என முடிவு செய்த கோர்ட்டு, அவருக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

தண்டனைக்காலம் முடிந்ததும் அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு விடுவார் என தகவல்கள் கூறுகின்றன. #tamilnews
Tags:    

Similar News