செய்திகள்

விருந்தினர்களுக்கு ஆடம்பர உபசரிப்பு: பாகிஸ்தான் திருமணத்தில் டாலர் நோட்டு மழை

Published On 2017-12-21 06:33 GMT   |   Update On 2017-12-21 06:33 GMT
பாகிஸ்தானில் நடந்த திருமணத்தில் மணமகன் வீட்டினருக்கு பரிசு பொருளாக அமெரிக்க டாலர், செல்போன்களை பெண் வீட்டார் பரிசு மழையாக வீசினர்.

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் முல்தான் அருகேயுள்ள சுஜாபாத் நகரை சேர்ந்தவர் முகமது அர்‌ஷத். இவருக்கும் பஞ்சாப் மாகாணம் கான்பூரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.

திருமணம் செய்ய மணமகள் வீட்டுக்கு மாப்பிள்ளை ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். அப்போது மணமகன் முகமது அர்‌ஷத்தை வரவேற்க பெண் வீட்டார் ஆவலுடன் தயாராக காத்திருந்தனர்.

அப்போது அவர்கள் எதிர்பாராத வகையில் மணமகன் அர்‌ஷத்தின் வீட்டினர் விருந்தினர்களுக்கு பரிசு பொருளாக அமெரிக்க பணமான டாலர் நோட்டுகளையும், சவுதிஅரேபியா பணமான ரியால் நோட்டுகளையும் பரிசு மழையாக வீசி பொழிந்தனர்.


மேலும் விலை உயர்ந்த செல்போன்கள் உள்ளிட்டவற்றை பரிசுகளாக வீசினர். இதை சற்றும் எதிர்பாராத விருந்தினர்கள் திக்கு முக்காடினர். வெளிநாட்டு பண நோட்டுகளையும், செல்போன்களையும் முண்டியடித்தபடி எடுத்து மகிழ்ந்தனர்.

இதை அறிந்த பொதுமக்களும் திரளானோர் திருமண வீட்டில் குவிந்தனர். அவர்களும் பரிசு மழையில் நனைந்தனர். தனது திருமணத்தின் நினைவு பரிசாக இவற்றை வழங்கியதாக மணமகன் முகமது அர்‌ஷத் கூறினார்.

Tags:    

Similar News