செய்திகள்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி வாலிபர் கைது

Published On 2017-11-22 18:54 GMT   |   Update On 2017-11-22 18:54 GMT
அமெரிக்காவில் குழந்தை ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதை அறிந்தும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தவறிய இந்திய வம்சாவளியை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்தவர் திவ்யா பட்டேல் (வயது 34). இந்திய வம்சாவளி. இவருக்கு திருமணமாகி ஒரு மாத ஆண் குழந்தை இருந்தது.

சம்பவத்தன்று திவ்யா பட்டேலின் மனைவி போலீசுக்கு போன் செய்து, தனது குழந்தையை கணவர் காரில் எடுத்து சென்றதாகவும், ஆனால் குழந்தை சுயநினைவு இல்லாமல் இருப்பதாகவும் கூறினார்.

இதையடுத்து, போலீசார் திவ்யா பட்டேலை செல்போனில் தொடர்பு கொண்டு பேசுகையில் அவர் போலீசாரிடம் பிடிகொடுக்காமல் பேசிவிட்டு, இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதையடுத்து, போலீசார் அவருடைய வீட்டுக்கு விரைந்தனர். அப்போது அங்கு காரில் வந்து இறங்கிய திவ்யா பட்டேலை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் காரில் சுயநினைவு இன்றி இருந்த குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

விசாரணையில் திவ்யா பட்டேல், தனது குழந்தை ஆபத்தான நிலையில் இருக்கிறது என்பதை அறிந்தும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க தவறிவிட்டார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் திவ்யா பட்டேலை கைது செய்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News