செய்திகள்

விமான புகையில் ஆணுறுப்பு வரைந்த போர் விமானி - மன்னிப்பு கேட்டது அமெரிக்க கடற்படை

Published On 2017-11-18 18:27 GMT   |   Update On 2017-11-18 18:27 GMT
விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது.
வாஷிங்டன்:

விமான புகையில் ஆணுறுப்பை வரைந்த போர் விமானியின் செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கோரியுள்ளது.

அமெரிக்காவின் போர் விமானங்கள் பல கோடி ரூபாய் மதிப்பில் மிகவும் தரமாக, அதி நவீன வசதிகள் கொண்டு உருவாக்கப்பட்டவை. போரில் எதிரி நாட்டு விமானங்களை வீழ்த்தும் திறமை வாய்ந்தவை.

அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ளது ஒகனோகன் நகரம். இந்த நகரின் வான்வெளியில் கடந்த வியாழக்கிழமை
கடற்படை போர் விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது.

அப்போது திடீரென அந்த விமானம் தலைகீழாக பறந்து சாகசம் செய்தது. விமானத்தில் இருந்து வெளிப்பட்ட புகையில் ஆணுறுப்பின் படம் போல் வானில் தெரிந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து அறிந்த அமெரிக்க கடற்படை, தனது போர் விமானியின் செயல்பாட்டுக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

இதுதொடர்பாக கடற்படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், போர் விமானியின் பொறுப்பற்ற செயலுக்கு அமெரிக்க கடற்படை மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. சம்பந்தப்பட்ட விமானியின் செய்கை முரணானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News