செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தூதரக ஊழியர் சுட்டுக் கொலை

Published On 2017-11-08 06:06 GMT   |   Update On 2017-11-08 06:06 GMT
ஆப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய ஊழியர் நய்யார் இக்பால்ரானா ஜலாலாபாத்தில் ஒரு கடையில் நின்று கொண்டிருந்த போது மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கராய்ச்சி:

ஆப்கானிஸ்தானில் நங்கள்கர் மாகாண தலைநகர் ஜலாலாபாத்தில் பாகிஸ்தான் தூதரகம் உள்ளது. அங்கு நய்யார் இக்பால்ரானா (52) என்பவர் ஊழியராக பணிபுரிந்தார்.

நேற்று ஜலாலாபாத்தில் ஒரு கடையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் இவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

இதனால் அங்கு பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. இதற்கிடையே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவலை ஜலாலாபாத் பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஜாகித்நஷ்டு லாகான் தெரிவித்தார். இக்கொலைக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் ஆப்கானிஸ்தான் அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதற்கிடையே அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.

கொல்லப்பட்ட ஊழியர் நய்யார் 5 குழந்தைகளின் தந்தை ஆவார். இவர் அங்கு 3 ஆண்டுகள் பணிமுடிந்த நிலையில் பாகிஸ்தான் திரும்ப இருந்தார். இதற்கு முன்பு 2 பாகிஸ்தான் தூதரக ஊழியர்கள் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
Tags:    

Similar News