செய்திகள்

சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதி

Published On 2017-10-30 00:36 GMT   |   Update On 2017-10-30 00:36 GMT
சவுதி அரேபியாவில் விளையாட்டு மைதானத்திற்குள் பெண்கள் நுழைய அனுமதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரியாத்:

சவுதி அரேபிய அரசு நவீன பொருளாதார திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என கருதுகிறது. அதன்படி பெண்களுக்கு பல சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே கடற்கரை ஓட்டலில் பெண்கள் ‘பிகினி’ நீச்சல் உடை அணியவும், வாகனம் ஓட்டவும் மன்னர் சல்மான் அனுமதி அளித்துள்ளார். 

இந்நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள விளையாட்டு மைதானங்களுக்குள் பெண்கள் நுழைய அனுமதிப்பட இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன்படி ரியாத், தம்மான், ஜித்தா ஆகிய இடங்களில் உள்ள மைதானங்களுக்குள் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் பெண்கள் நுழைய அனுமதிக்கப்பட இருப்பதாக விளையாட்டுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கடந்த மாதம் ஒரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தேசிய நாள் கொண்டாட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News