செய்திகள்

பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படவேண்டும்: ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு

Published On 2017-10-24 18:43 GMT   |   Update On 2017-10-24 18:43 GMT
பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படவேண்டும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.
மணிலா:

பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்படவேண்டும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

ஆசிய நாடுகளின் 4-வது ராணுவ மந்திரிகள் மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நடந்தது. இதில் இந்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். மாநாட்டில் அவர் பேசியதாவது:-

பயங்கரவாதமும், சமூக ஊடகங்கள் மூலம் பரவி வரும் பயங்கரவாத்தை ஆதரிக்கும் போக்கும் உலக நாடுகளின் பாதுகாப்பு மிகப்பெரும் சவால்களாக அமைந்துள்ளன. உலக அளவில் அவ்வப்போது புதுவித சவால்கள் தோன்றிக் கொண்டேதான் இருக்கின்றன. சமூக ஊடகங்கள் வாயிலாகவும், இணைய வழியாகவும் தற்போது இது மாதிரியான பயங்கரவாத அச்சுறுத்தல்கள் விரிவடைந்து உள்ளன. பயங்கரவாதிகள் இவற்றை சாதகமாக பயன்படுத்தி மக்களின் மனதை மாற்றுவதில் ஈடுபட்டு வருகின்றனர்.



சமீப காலமாக நமது பிராந்தியமும், குறிப்பிடத்தக்க அளவில் இத்தகைய மாற்றங்களை சந்தித்து வருகிறது. எனவே இதுபோன்ற பயங்கரவாத சவால்களை எதிர்த்து போராட நாம் மரபு சார்ந்த முறையிலும்(ராணுவம்), மரபு சாராத முறையிலும் தயாராகவேண்டும்.

அனைத்து நாடுகளும் இதில் கூட்டாக இணைந்து செயல்பட்டால்தான் பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும். அண்மையில் பிலிப்பைன்ஸ், தனது நாட்டின் தென் பகுதியில் பயங்கரவாதிகளால் உருவாக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு தக்க பதிலடி கொடுத்து தீர்வு கண்டதை பாராட்டுகிறேன்.

பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பிலிப்பைன்ஸ் அரசு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி. ஏனென்றால் பயங்கரவாதிகளில் யாரும் நல்லவர்கள் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News