செய்திகள்
ஜேம்ஸ் டூபேக்

அமெரிக்க சினிமா பட டைரக்டர் மீது 38 பெண்கள் கற்பழிப்பு புகார்

Published On 2017-10-24 05:21 GMT   |   Update On 2017-10-24 05:22 GMT
அமெரிக்காவில் ஆலிவுட் சினிமா பட டைரக்டர் ஜேம்ஸ் டூபேக் மீது 38 பெண்கள் கற்பழிப்பு புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
லாஸ் ஏஞ்சல்ஸ்:

அமெரிக்காவில் ஆலிவுட் சினிமா பட டைரக்டர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது அதிக அளவில் ‘செக்ஸ்’ புகார் கூறப்பட்டு வருகிறது.

சமீபத்தில் சினிமா பட தயாரிப்பாளர் ஹார்வி வின்டஸ்டீன் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட 36-க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிப்பு குற்றம் சுமத்தினார்கள்.

இவர் தயாரித்த ஏராளமான படங்கள் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவை. மேலும் இவர் ஆஸ்கார் விருது தேர்வு கமிட்டியில் இடம் பெற்றிருந்தார். கற்பழிப்பு புகார்கள் வந்ததை தொடர்ந்து அவர் அக்குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில் தற்போது மற்றொரு ஆலிவுட் சினிமா பட டைரக்டர் மீது 38 பெண்கள் கற்பழிப்பு புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அவரது பெயர் ஜேம்ஸ் டூபேக். 72 வயதான இவர் ஏராளமான படங்களுக்கு கதை வசனம் டைரக்டு செய்துள்ளார்.

இவர் நியூயார்க் நகர வீதிகளில் பல பெண்களை சந்தித்தார். அவர்களை தனது வழிக்கு கொண்டு வர சினிமாவில் நடிக்க வைத்து மிகப்பெரிய நடிகையாக்குவதாக ஆசைவார்த்தை கூறி கற்பழித்ததாக புகார் செய்துள்ளனர்.

அவர்களில் 31 பெண்கள் ஆடியோ மூலம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அவர்களில் பிரபல கிதார் மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர் லூயிஸ் போஸ்ட் என்பவரும் ஒருவர். மற்றொருவர் நடிகை இகோ தனோன் என்பவரும் அடங்குவார்.

ஆனால் இக்குற்றச்சாட்டை டைரக்டர் ஜேம்ஸ் டூபேக் மறுத்துள்ளார். நான் எப்போதும், எங்கும் எந்த பெண்ணையும் சந்திக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News