செய்திகள்

அமெரிக்காவில் தினமும் 30 லட்சம் பேர் பாதுகாப்புக்காக துப்பாக்கி எடுத்து செல்கின்றனர்: ஆய்வில் தகவல்

Published On 2017-10-21 07:47 GMT   |   Update On 2017-10-21 07:47 GMT
அமெரிக்காவில் தினமும் 30 லட்சம் பேர் பாதுகாப்புக்காக தங்களுடன் குண்டுகள் நிரப்பிய கைத்துப்பாக்கியை எடுத்து செல்வதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வாஷிங்டன்:

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகி விட்டது. இதனால் அங்கு துப்பாக்கி சூடு சம்பவங்களும், அதையடுத்து ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. எனவே துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அங்கு எழுந்துள்ளது.

இந்த நிலையில், துப்பாக்கி வைத்திருப்போர் குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழக நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அமெரிக்காவில் தினமும் 30 லட்சம் பேர் தங்களுடன் குண்டுகள் நிரப்பிய கைத்துப்பாக்கியை எடுத்து செல்கின்றனர். மேலும் 90 லட்சம் பேர் மாதம் ஒரு முறை எடுத்து செல்வது தெரிய வந்துள்ளது. 90 சதவீத துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழப்புகள் நடக்கின்றன. துப்பாக்கி எடுத்து செல்பவர்களில் 66 சதவீதம் பேர் அவற்றை மறைத்து கொண்டு செல்கின்றனர். 10 சதவீதம் பேர் ஒளிவு மறைவின்றி எடுத்து செல்கின்றனர். என்பன போன்ற விவரங்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் பெருகியதற்கு காரணம் குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பாதுகாப்பு காரணங்கள் கருதியே துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அவற்றை தங்களுடனே எடுத்து செல்வதாகவும் தெரிவித்தனர். பெரும்பாலான இளைஞர்களே தங்களுடன் துப்பாக்கி கொண்டு செல்வது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
Tags:    

Similar News