செய்திகள்

அமெரிக்காவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Published On 2017-10-09 10:19 GMT   |   Update On 2017-10-09 10:20 GMT
அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் நேற்று 6.6 ரிக்டரில் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

வாஷிங்டன்:

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணத்தில் மேற்கு கடற்கரையோர பகுதியில் நேற்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனால் அப்பகுதி முழுவதும் அதிர்ந்தது. வீடுகள் குலுங்கின. எனவே பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்ட வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர். பாதுகாப்பான இடங்களில் தங்கினர்.

அங்கு 6.6 ரிக்டரில் நில நடுக்கம் பதிவானது. புல்டிர் தீவில் 111.8 கி.மீட்டர் (69 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் எழும்பின. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை.

உயிரிழப்பு, சேத விவரம் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் அலாஸ்கா மாகானத்தில் முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

Tags:    

Similar News