செய்திகள்

அமெரிக்காவின் மிரட்டல்களை மீறி ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

Published On 2017-09-23 15:17 GMT   |   Update On 2017-09-23 15:17 GMT
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி புதிய நடுத்தர இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனையை ஈரான் வெற்றிகரமுடன் நடத்தி முடித்துள்ளது.

தெஹ்ரான்:

ரஷியா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு பல்வேறு வகையில் தீங்குகள் விளைவிப்பதால் அந்த நாடுகள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தது. அந்நாடுகள் ஏவுகணை சோதனையை நடத்த கூடாது என்றும் மீறி நடத்தினால் அணு ஆயுத ஒப்பந்தத்தினை மீறியதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்தது.

எனினும் இந்த எச்சரிக்கையை மீறி ஈரான் நேற்று, நடுத்தர தொலைவிலுள்ள இலக்கை தாக்கு அழிக்கும் புதிய ரக கோரம்சாஹர் என்ற ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது.

இதுபற்றிய படக்காட்சி ஒன்றை அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஏவுகணை பறந்து சென்றபொழுது எடுக்கப்பட்ட படக்காட்சியும் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பரிசோதனை நடந்த நாள் பற்றிய தகவலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பியவர்கள் வெளியிடவில்லை. ஈரான் அதிகாரிகள் விரைவில் ஏவுகணை சோதனை நடத்தப்படும் என சமீபத்தில் அறிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News