செய்திகள்

டொமினிகாவை தொடர்ந்து அமெரிக்க தீவுகளை தாக்கிய மரியா புயல்

Published On 2017-09-20 09:53 GMT   |   Update On 2017-09-20 09:53 GMT
மரியா புயல் டொமினிகாவை தாக்கியதை தொடர்ந்து அமெரிக்க தீவுகளை தாக்கியது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

வாஷிங்டன்:

அமெரிக்கா அருகே அட்லாண்டிக் கடலில் ‘மரியா’ புயல் உருவானது. அது கரீபியன் கடலில் உள்ள டொமினிகா தீவை கடுமையாக தாக்கி துவம்சம் செய்தது.

அங்கிருந்து மேலும் தீவிரம் அடைந்து கரீபியன் கடல் பகுதியில் உள்ள விர்ஜின் தீவுகள் மற்றும் போர்ட்டோரிகோவை தாக்கியது. இவை அமெரிக்காவுக்கு சொந்தமான தீவுகளாகும்.

அங்கு மணிக்கு 280 கி.மீட்டர் வேகத்தில் கடுமையான காற்று வீசியது. பலத்த மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

போர்ட்டோரிகோவில் 35 லட்சம் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

விர்ஜின் தீவுகளிலும் கடும் சூறாவளியுடன் கூடிய பலத்த மழை கொட்டியது. பல மரங்கள் வேருடன் சாய்ந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News