செய்திகள்

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் நிதி மந்திரிக்கு பிடி வாரண்ட்

Published On 2017-09-20 08:40 GMT   |   Update On 2017-09-20 12:45 GMT
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் கண்காணிப்பில் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தின் முதல்நாள் விசாரணைக்கு ஆஜராகாத முன்னாள் நிதி மந்திரியை கைது செய்யுமாறு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

வருமானத்தை மீறிய சொத்து சேர்த்ததாக பாகிஸ்தான் நிதி மந்திரி இஷாக் டர் மீது தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று தேசிய பொறுப்புடைமை நீதிமன்ற நீதிபதி முஹம்மது பஷிர் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இஷாக் டர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தனது கட்சிக்காரர் வெளிநாட்டில் இருப்பதால் இன்று ஆஜராக இயலவில்லை என விளக்கம் அளித்தார்.

எனினும், இஷாக் டர் எப்போது விசாரணைக்கு ஆஜர் ஆவார்? என்பது தொடர்பாக அவர் உறுதியாக எதுவும் தெரிவிக்காததால், இஷாக் டர்-ஐ கைது செய்து வரும் 25-ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், அந்த தேதிக்கு முன்னதாக இஷாக் டர் கோர்ட்டில் ஆஜராகி பத்து லட்சம் ரூபாய் ஜாமினில் விடுவிக்கப்படலாம் என சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

வரும் 25-ம் தேதியும் ஆஜராக தவறினால் ஜாமினில் வெளியே வர இயலாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என இஷாக் டர் தரப்பை நீதிபதி எச்சரித்துள்ளார்.
Tags:    

Similar News