செய்திகள்

ஜப்பானை மிரட்டும் தாலிம் புயல்: கனமழை எச்சரிக்கயால் விமான, ரெயில் சேவைகள் ரத்து

Published On 2017-09-17 06:54 GMT   |   Update On 2017-09-17 06:54 GMT
பசுபிக் பெருங்கடலில் உருவான தாலிம் புயலால் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகளில் கனமழை மற்றும் புயல்காற்று வீசலாம் என எச்சரிக்கக்கப்பட்டுள்ளதால் விமான, ரெயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
டோக்கியோ:

பசுபிக் பெருங்கடலில் 18-வது புயலாக தாலிம் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலால் ஜப்பானின் தென்மேற்கு பகுதிகள் மற்றும் ஜப்பானின் தெற்கு பகுதிகளில் உள்ள தீவான யுஷு ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும், அதிவேகமாக காற்று வீசும் எனவும், நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் 
தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, விமான சேவைகள் மற்றும் புல்லட் ரெயில்கள் உள்பட நூற்றுக்கணக்கான ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த புயல் வலுவடைந்து இன்று மாலை கிழக்குப்பக்கமாக அதாவது தலைநகர் டோக்கியோ நோக்கி நகரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

புயலின் பாதையில் உள்ள நகரங்களில் வசிக்கும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News