செய்திகள்

இர்மா புயல் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்தது - 11 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவிப்பு

Published On 2017-09-15 11:45 GMT   |   Update On 2017-09-15 11:45 GMT
அமெரிக்காவை துவம்சம் செய்த இர்மா புயல் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது. புளோரிடா மாநிலத்தை புயல் கடந்து 5 நாட்களாகியும் சுமார் 11 லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
நியூயார்க்:

அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த வாரம் உருவான சக்திவாய்ந்த இர்மா புயல் மணிக்கு சுமார் 130 கிலோமீட்டர் வேகத்தில் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை சூறையாடியது. புயலுடன் பெய்த கனமழையின் எதிரொலியாக மாநிலத்தின் பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் ஓரளவுக்கு முடிந்த நிலையில் இர்மா புயல் மற்றும் மழை, வெள்ளத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறிப்பாக, சமீபத்தில் புளோரிடாவில் 32 பேரும், ஜார்ஜியா மற்றும் தெற்கு கரோலினா பகுதிகளில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர். மியாமி நகரில் உள்ள முதியோர் மருத்துவமனையில் மின்சாராம் இல்லாததால் ஏற்பட்ட வெப்பம் மற்றும் புழுக்கத்தால் 8 பேர் உயிரிழந்தனர்.

இன்னும் மின்சார இணைப்பு சீர்படுத்தப்படாத நிலையில் இங்குள்ள சுமார் 11 லட்சம் வீடுகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Tags:    

Similar News