செய்திகள்

சவூதி மன்னர் - கத்தார் இளவரசர் தொலைபேசியில் பேச்சு: இருநாடுகள் இடையே பிரச்சனை விலகுமா?

Published On 2017-09-09 00:07 GMT   |   Update On 2017-09-09 00:07 GMT
தூதரக ரீதியிலான உறவுகளை முறித்துக்கொண்ட நிலையில் சவூதி மன்னர் சல்மான் கத்தார் இளவரசர் ஷேக் தமீம் உடன் போனில் பேசியுள்ளார்.
ஜெட்டா:

தீவிரவாத இயக்கங்களுக்கு மறைமுகமாக உதவுவதாக கூறி கத்தார் உடனான தூதரக உறவை சவூதி, ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட 6 நாடுகள் முறித்துக்கொண்டன. வளைகுடா நாடுகளுக்கிடையே நடந்துள்ள இந்த மோதல் சில மாதமாக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில், நேற்று முந்தினம் கத்தார் - அரபு நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய தயார் என டிரம்ப் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, சவூதி மன்னர் சல்மான் கத்தார் இளவரசர் ஷேக் தமீம் இடையே தொலைபேசி பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மற்ற நாடுகளுடன் உறவை புதுப்பிப்பது குறித்து பேசியிருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன. 
Tags:    

Similar News