செய்திகள்

அமெரிக்கா: உணவகத்தில் சமையல்காரரை சுட்டுக்கொன்ற பணியாளர் - பிணைக்கைதிகளாக மக்கள் பிடிப்பு

Published On 2017-08-25 00:07 GMT   |   Update On 2017-08-25 00:07 GMT
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள உணவகத்தில் பணியாளர் ஒருவர் சமையல்காரரை சுட்டுக்கொன்று விட்டு அங்குள்ள மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நியூயார்க்:

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ள உணவகத்தில் பணியாளர் ஒருவர் சமையல்காரரை சுட்டுக்கொன்று விட்டு அங்குள்ள மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் இருக்கும் சார்லெஸ்டான் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 3.30 மணியளவில் அங்குள்ள பணியாளர் சமையல்காரர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுள்ளார்.

மேலும், உணவகத்தில் இருந்த மக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்து மிரட்டலில் ஈடுபட்டுள்ளார். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் தாக்குதல் நடத்திய நபரை மடக்கிப்பிடித்து பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தீவிரவாத தாக்குதல் இல்லை என கூறியுள்ள அந்நகர மேயர், உணவக பணியாளர் அதிருப்தியில் இருந்துள்ளதாகவும், அதனால் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

Similar News