செய்திகள்

மூன்று ஆண்டிற்கு பின் இந்தியா-நேபாளம் இடையே ரெயில் சேவை - மக்கள் மகிழ்ச்சி

Published On 2017-08-16 10:37 GMT   |   Update On 2017-08-16 10:37 GMT
இந்தியா-நேபாளம் எல்லையில் மூடப்பட்டிருந்த ரெயில் சேவை மூன்று ஆண்டிற்கு பிறகு நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
காத்மாண்டு:

நேபாளம் நாட்டின் ஜனக்பூருக்கும் இந்தியாவிற்கும் இடையில் 2014 ஆம் ஆண்டிற்கு முன் ரெயில் சேவை இருந்து வந்தது. நேபாள மக்கள் அதன் மூலம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்து வந்தனர்.

2014 ஆம் ஆண்டு நிகழ்ந்த விபத்திற்கு பின் ரெயில் சேவை முற்றிலுமாக மூடப்பட்டது. அதனால் மக்களின் வர்த்தகம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மேலும் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொருளாதாரத்தில் சற்று சரிவு ஏற்பட்டது. இந்நிலையில் நேபாளத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இந்தியா- நேபாளம் இடையில் புதிய ரெயில் பாதை அமைக்க அரசு முடிவு செய்து பணிகளை தொடங்கி உள்ளது. அதற்கு இந்தியா பொருளாதார ரீதியாக உதவி செய்துள்ளது.

மேலும், சீனாவும் நேபாளத்தில் சாலை மற்றும் நீர்மின் நிலையம் அமைக்க 8.3 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது.

இதற்கிடையில், ஜனக்பூர் மக்கள் புதிய ரெயில் சேவை குறித்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இதற்கு பின் பொருளாதாரத்தில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும் என நம்புகின்றனர்.

Tags:    

Similar News