செய்திகள்

நீதிபதிகளை விமர்சித்ததாக புகார் - நவாஸ் ஷெரீப்புக்கு லாகூர் ஐகோர்ட்டு நோட்டீஸ்

Published On 2017-08-15 20:42 GMT   |   Update On 2017-08-15 20:42 GMT
தனக்கு எதிராக தீர்ப்பு அளித்த நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த நவாஸ் ஷெரீப், 4 மந்திரிகள் உள்பட 14 மூத்த தலைவர்களுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
லாகூர்:

பனாமா பேப்பர் விவகாரத்தில், பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் அமர்வு கடந்த மாதம் தகுதி நீக்கம் செய்தது. அதைத்தொடர்ந்து அவர் பதவி விலகினார்.

கடந்த வாரம் அவர் இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு பயணம் செய்தார். அப்போது, அவர் தனக்கு எதிராக தீர்ப்பு அளித்த நீதிபதிகளை கடுமையாக விமர்சித்ததாக வக்கீல் அசார் சித்திக் என்பவர் லாகூர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

அதில், ‘நவாஸ் ஷெரீப் மட்டுமின்றி, பாகிஸ்தான் மந்திரிகளும், அவரது கட்சி மூத்த தலைவர்களும் கூட நீதிபதிகளை அவதூறாக பேசி உள்ளனர். அதற்காக அவர்கள் மீது தேச துரோக வழக்கு தொடர வேண்டும்’ என்று அவர் கூறி இருந்தார்.இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, நவாஸ் ஷெரீப், 4 மந்திரிகள் உள்பட 14 மூத்த தலைவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் 25-ந் தேதிக்குள் அவர்கள் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. 
Tags:    

Similar News