செய்திகள்

வடகொரியா உடன் அணு ஆயுதப்போருக்கான உடனடி காரணங்கள் இல்லை - சி.ஐ.ஏ இயக்குநர்

Published On 2017-08-13 19:09 GMT   |   Update On 2017-08-13 19:09 GMT
வடகொரியா உடன் அணு ஆயுதப்போருக்கான உடனடி காரணங்கள் இல்லை என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குநர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

வடகொரியா உடன் அணு ஆயுதப்போருக்கான உடனடி காரணங்கள் இல்லை என அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குநர் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார்.

வடகொரியா உடனான ராணுவ ரீதியிலான மோதலுக்கு பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் போருக்குத் தயாரான நிலையில் அமெரிக்கா இருப்பதாக தெரிவித்து விட்ட நிலையில், வட கொரியா ஆகஸ்ட் மத்தியில் குவாம் தீவு அருகே சென்று விழும்படி நான்கு மத்தியதூர ஏவுகணைகளை பரிசோதிக்க திட்டமிட்டுள்ளதாக இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தது.

குவாம் தீவு அமெரிக்காவின் நிலப்பரப்பிலிருந்து 7,000 கி.மீட்டர்கள் தொலைவில் உள்ளது. அத்தீவு அமெரிக்காவின் கப்பற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றைக் கொண்டுள்ளது. அங்கிருந்த இரண்டு பி-1பி சூப்பர்சானிக் போர் விமானங்கள் வட கொரியாவிற்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ.வின் இயக்குநர் மைக் போம்பியோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வடகொரியா உடன் அமெரிக்கா அணு ஆயுதப்போர் நடத்துவதற்கான உடனடி காரணங்கள் இல்லை. இருப்பினும், அமெரிக்கா பொறுமையான தந்திரங்களை கையாளக் கூடாது” எனக் கூறினார்.

மேலும், “வடகொரியா தொடர்ந்து ஏவுகணைகளை பரிசோதிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது” எனவும் மைக் போம்பியோ தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News