search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ட்ரம்ப்"

    அமெரிக்காவின் ஓஹியோ மாநிலத்தில் உள்ள குழந்தைகள் மருத்துவமனைக்கு சென்றிருந்த டிரம்ப், அங்கு குழந்தைகளுடன் தேசிய கொடி வரையும் போது தவறான வண்ணத்தை கொடுத்தது கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. #Trump #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் தேசிய கொடியில் 7 சிவப்பு கோடுகள், 6 வெள்ளை கோடுகள் என மொத்தம் 13 கோடுகள் இருக்கும். இந்த கோடுகள் அமெரிக்கா உருவான போது இருந்த 13 மகாணங்களை குறிக்கும். மேலும், இடது ஓரத்தில் நீல நிற கட்டத்துக்குள் 50 நட்சத்திரங்கள் இருக்கும். இது, தற்போது உள்ள 50 மாநிலங்களை குறிக்கும்.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் ஓஹியோ மாநிலத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர். அங்கு குழந்தைகள் தேசிய கொடிகளை நோட்டுகளில் வரைந்து கொண்டு இருந்தனர். அவர்களோடு சற்று நேரம் உரையாடிய டிரம்ப், அவர்கள் வரைந்த தேசிய கொடிக்கு வண்ணம் கொடுத்தார்.

    சிவப்பு கோடுக்கு கீழே வெள்ளை நிறம் இருக்க வேண்டிய இடத்தில், அவர் நீல நிற வண்ணத்தை கொடுத்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியதை அடுத்து, நெட்டிசன்களின் கிண்டலுக்கு டிரம்ப் உள்ளாகியுள்ளார். 
    முன்னாள் வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால், அதிர்ச்சியில் உள்ள டிரம்ப் தன்னை பதவியிலிருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என கூறியுள்ளார். #TrumpResign #MichaelCohen
    வாஷிங்டன்:

    கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட்ட போது, ஆபாச பட நடிகை உள்பட 2 பெண்கள் டிரம்ப் மீது பாலியல் புகார் சுமத்தினர். அவர்களுக்கு டிரம்ப்பின் வழக்கறிஞர் மைக்கேன் கோஹன் பணம் கொடுத்து வாயை அடைத்ததாக புகார் எழுந்தது.

    இந்நிலையில், இது தொடர்பான வழக்கில் கோஹன் தான் குற்றம் செய்ததை கோர்ட்டில் ஒத்துக்கொண்டார். டிரம்ப் கூறியே தான் இப்படி செய்ததாக அவர் தெரிவித்திருந்தார். தேர்தல் விதிமுறைகளை மீறி பணம் கொடுக்கப்பட்டுள்ளதால் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என அமெரிக்காவில் குரல் எழுந்துள்ளது.

    இது மட்டுமல்லாமல்  டிரம்பின் முன்னாள் உதவியாளர் பால் மானபோர்ட் வங்கிமோசடி வழக்கில் குற்றவாளி என கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ளார். மேற்கண்ட சம்பவங்களால் டிரம்ப் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். 

    இந்நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக பேட்டியளித்த டிரம்ப், தன்னை பதவியிலிருந்து நீக்கினால் அமெரிக்க பொருளாதாரம் சீர்குலையும் என கூறியுள்ளார். ‘எல்லா வேலையையும் சரியாக செய்யும் ஒருவரை எப்படி பதவியிலிருந்து நீக்க முடியும் என எனக்கு தெரியவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
    மெக்சிகோவில் இருந்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக அமெரிக்கா வருபவர்கள் மனிதர்கள் இல்லை விலங்குகள் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்துள்ளார். #Trump
    வாஷிங்டன்:

    மெக்சிகோவில் இருந்து எல்லை தாண்டி அமெரிக்காவுக்குள் வருபவர்களை தடுக்க தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. தீவிர கண்காணிப்பையும் மீறி உள்ளே நுழைபவர்கள் உடனடியாக கைது செய்யப்படுகின்றனர். இதையும் தாண்டி பலர் அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர்.

    இந்நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் அதிபர் டிரம்ப் பேசுகையில், “சட்டவிரோதமாக மக்கள் நாட்டிற்கு வருவதை வர முயற்சிப்பதை நாம் வெகுவாக நிறுத்தி இருக்கிறோம். அப்படி வருபவர்களை  நாட்டை விட்டு வெளியேற்றுகிறோம். இந்த மக்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று நீங்கள் நம்பமாட்டீர்கள். இவர்கள் மக்கள் அல்ல  விலங்குகள்” என கூறினார்.

    மேலும், “ பலவீனமான சட்டங்களின் காரணமாக அவர்கள் நாட்டிற்குள் விரைந்து வருகிறார்கள். நாம் பிடிக்கிறோம், விடுதலை செய்கிறோம் மீண்டும் பிடிக்கிறோம், மீண்டும் அவர்களை விடுதலை செய்கிறோம் இது பைத்தியக்காரத்தனம். முட்டாள்தனமான சட்டங்களால் நாட்டில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரின் வருகை அதிகரிக்கிறது. அமெரிக்காவிற்கு  சட்டபூர்வமாக மற்றும் தகுதி அடிப்படையில் மக்கள் வர வேண்டும்” என அவர் பேசியுள்ளார்.

    சில மாதங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிவர்களை கெட்ட வார்த்தை பயன்படுத்தி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Trump
    ×