செய்திகள்

சிரிய கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத உதவிகளை நிறுத்தியதற்கு ரஷ்யா காரணமல்ல: அமெரிக்க ராணுவத் தளபதி

Published On 2017-07-22 03:47 GMT   |   Update On 2017-07-22 03:47 GMT
சிரிய போராளிக்குழுக்களுக்கு அமெரிக்க உளவு அமைப்புகள் வழங்கி வந்த ஆயுத உதவிகள் நிறுத்தப்பட்டதற்கு ரஷ்யா காரணமல்ல என அமெரிக்க ராணுவத் தளபதி ரேமண்ட் தாமஸ் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன்:

சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிராக அந்நாட்டில் போராளிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்கா உளவு அமைப்பான சி.ஐ.ஏ ஆயுத உதவிகள் மற்றும் நிதி உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல அரசுப்படையினருக்கு ஆதரவாக ரஷ்யா பல்வேறு வகையிலான உதவிகள் செய்து வருகின்றன.

இதற்கிடையே, சிரியாவில் அமைதி திரும்பவும், ரஷ்யாவுடனான ராஜ்ஜிய ரீதியிலான உறவுகளை மேம்படுத்தவும் அமெரிக்கா சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன் ஒருபடியாக போராளிக் குழுக்களுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

தென் மேற்கு சிரியாவில் போர் நிறுத்தம் செய்ய டிரம்பும், புடினும் பேச்சு நடத்துவதற்கு முன்பே இது பற்றி முடிவு செய்யப்பட்டதாக அமெரிக்க நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், போராளிக்குழுக்களுக்கு ஆயுத உதவிகள் நிறுத்தப்பட்டதற்கு கண்டிப்பாக ரஷ்யா காரணமல்ல என அமெரிக்க ராணுவத் தளபதி ரேமண்ட் தாமஸ் கூறியுள்ளார்.
Tags:    

Similar News