செய்திகள்

பாகிஸ்தானுக்கு நிதி வழங்க கடும் நிபந்தனைகள் - அமெரிக்க பாராளுமன்றக்குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு

Published On 2017-07-20 20:26 GMT   |   Update On 2017-07-20 20:26 GMT
பாகிஸ்தானுக்கு நிதி வழங்க கடும் நிபந்தனைகளை விதிப்பது என்று அமெரிக்க பாராளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன்:

பாகிஸ்தானுக்கு நிதி வழங்க கடும் நிபந்தனைகளை விதிப்பது என்று அமெரிக்க பாராளுமன்ற குழு ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்துள்ளது.

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்காக அமெரிக்கா நிதி உதவி அளித்து வருகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக முடிவு எடுப்பதற்காக அமெரிக்க பாராளுமன்றத்தின், ஒதுக்கீட்டுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது.

இந்த கூட்டத்தில், 2018-ம் ஆண்டுக்கான மாகாணம் மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகள் ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஓட்டெடுப்பு நடத்தி ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த மசோதாவின்படி அமெரிக்கா வழக்கமான சீர்திருத்த மற்றும் வெளிநாட்டு தற்செயல் நடவடிக்கைகள் நிதியாக 47 பில்லியன் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3 லட்சத்து 5 ஆயிரத்து 500 கோடி) உலக நாடுகளுக்கு வழங்க முடியும்.

இந்தத் தொகை, 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 10 பில்லியன் டாலர் (சுமார் ரூ.65 ஆயிரம் கோடி) குறைவு ஆகும். இந்த மசோதா, அடுத்த கட்டமாக பாராளுமன்ற பிரதிநிதிகள் சபையின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த மசோதா, பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் நிதி உதவியை அளிப்பதற்கு வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் சான்றிதழ் வழங்க வகை செய்துள்ளது.

மேலும், அவர் பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்க வேண்டுமானால், அங்கு இயங்கி வருகிற அனைத்து விதமான பயங்கரவாத குழுக்கள் மீதும் பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கவும் வழி வகுத்துத்தந்துள்ளது.

குறிப்பாக பாகிஸ்தானில் இயங்கி வருகிற ஹக்கானி நெட்வொர்க், குவெட்டா சுரா தலீபான், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, அல் கொய்தா மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்குகிற அமெரிக்காவின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு பாகிஸ்தான் ஒத்துழைப்பு தருகிறது என்று ரெக்ஸ் டில்லர்சன், அமெரிக்க பாராளுமன்றத்துக்கு சான்றுரைத்து அறிக்கை அளிக்க வேண்டும்.

மேலும், அமெரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள அதன் கூட்டுப்படைகள் ஆகியவற்றுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதில்லை என்றும் அவர் சான்றிதழ் தர வேண்டும்.

பாகிஸ்தானில் அரசியல், நீதித்துறை செயல்பாடுகளில் நீதித்துறைக்கு புறம்பாக பாகிஸ்தான் ராணுவமும், உளவு அமைப்புகளும் ஈடுபடக்கூடாது என்பதுவும் நிபந்தனைகளில் அடங்கும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் அமெரிக்கா விதிக்கிற நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றத் தவறினால் வெளி யுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், அந்த நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தி உத்தரவிட முடியும். 
Tags:    

Similar News