செய்திகள்

கத்தார் மீதான தடையால் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு பாதிப்பில்லை: பிபா

Published On 2017-07-19 22:59 GMT   |   Update On 2017-07-19 22:59 GMT
கத்தார் மீது 7 அரபு நாடுகள் தடைவிதித்துள்ள விவகாரம் 2022-ம் ஆண்டு நடக்க உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பாதிக்காது என சர்வதேச கால்பந்து சம்மேளமான பிபா தெரிவித்துள்ளது.
லண்டன்:

கத்தார் மீது 7 அரபு நாடுகள் தடைவிதித்துள்ள விவகாரம் 2022-ம் ஆண்டு நடக்க உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளை பாதிக்காது என சர்வதேச கால்பந்து சம்மேளமான பிபா தெரிவித்துள்ளது.

தீவிரவாதத்தை ஊக்குவிப்பதாக கூறி அரபு நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம், பஹ்ரைன், எகிப்து, ஏமன், லிபியா ஆகிய நாடுகள் கத்தாரை ஒதுக்கி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தீவிரவாதத்திற்கு ஆதரவளிப்பதால்  2022-ம் ஆண்டு நடைபெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை கத்தாரில் நடத்தக் கூடாது என அரபு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.

6 அரேபிய நாடுகள் பிபா உலகக் கோப்பை போட்டியை நடத்தக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து பிபா அமைப்புக்கு கடிதம் எழுதியதாக ஸ்விஸ் நாட்டு ஊடக நிறுவனம் செய்தி வெளியிட்டு இருந்தது.

இதுகுறித்து பேசிய பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ, ”கத்தாரில் நடக்கும் பிபா கால்பந்து உலகக்கோப்பை போட்டியை நடத்தக்கூடாது என எந்த நாடும் இதுவரை கடிதம் அனுப்பவில்லை. இந்தக் கடித விவகாரம் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை. பிபா அமைப்புடன் கத்தாரில் உலகக் கோப்பையை நடத்தும் கமிட்டிகள் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றன. மற்ற நாடுகள் ஏற்படுத்தி இருக்கும் இப்போதைய சிக்கல் கத்தாரில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை பாதிக்காது” என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News