செய்திகள்

எகிப்து நாட்டில் 2 ஜெர்மானியர்கள் கத்தியால் குத்திக் கொலை

Published On 2017-07-14 18:03 GMT   |   Update On 2017-07-14 18:03 GMT
எகிப்து நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட இரண்டு ஜெர்மானியர்கள் மர்ம கும்பலால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 4 வெளிநாட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.
கெய்ரோ:

எகிப்து நாட்டில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட இரண்டு ஜெர்மானியர்கள் மர்ம கும்பலால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும், 4 வெளிநாட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

எகிப்து நாட்டின் செங்கடல் கரையோரம் உள்ள விடுதிகளில் அதிகளவிலான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் தங்கியுள்ளனர். இன்று அங்கு நுழைந்த மர்ம கும்பல் கண்மூடிதனமாக கத்தியால் அங்கிருந்தவர்களை தாக்கியுள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

பாதுகாப்பு படையினர் விரைந்து வருவதற்குள் மர்ம கும்பல் தப்பி விட்டனர். இந்த கோர தாக்குதலில் 2 ஜெர்மானியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். முதலில் பலியானவர்கள் உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியானது. ஆனால், போலீசார் பலியான இருவரும் ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்தனர்.

மேலும், நான்கு வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்துள்ளனர். அதில், இருவர் செக் குடியரசு நாட்டைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருவதாக அந்நாட்டு பாதுகாப்பு படை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News