செய்திகள்

பனாமா கேட் ஊழல் வழக்கு - நவாஸ் ஷெரீப் மகளுக்கு சம்மன்

Published On 2017-06-27 22:27 GMT   |   Update On 2017-06-27 22:27 GMT
பனாமா கேட் ஊழல் வழக்கு தொடர்பாக நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கும் கூட்டு புலனாய்வுக்குழு சம்மன் அனுப்பி உள்ளது. விசாரணைக்காக வரும் 5-ந் தேதி ஆஜராகுமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது எழுந்துள்ள ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்பேரில், பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.ஐ.ஏ.யின் கூடுதல் தலைமை இயக்குனர் வாஜித் ஜியா தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு புலனாய்வுக்குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்த குழு முன்பாக நவாஸ் ஷெரீப்பும், அவரது மகன்களும் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர். இந்த நிலையில் நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாசுக்கும் கூட்டு புலனாய்வுக்குழு சம்மன் அனுப்பி உள்ளது. அவர் விசாரணைக்காக வரும் 5-ந் தேதி நேரில் ஆஜராகுமாறு அதில் உத்தரவிடப்பட்டுள்ளது.



அதே நேரத்தில் தற்போது மரியம் நவாஸ், இஸ்லாமாபாத்தில் இல்லை. அவர் தனது மகனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் சென்றுள்ளார். இந்த தகவலை பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் மூத்த தலைவர் தலால் சவுத்ரி தெரிவித்தார். எனவே மரியம் நவாஸ், ஆஜர் ஆவாரா, அவகாசம் கேட்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் கூட்டு புலனாய்வுக்குழு தனது அறிக்கையை பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வரும் 10-ந் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News