செய்திகள்

அமெரிக்கா: நாயை குறிவைத்த போலீஸ் - தவறுதலாக குண்டு தாக்கி மாணவி பலி

Published On 2017-06-24 01:06 GMT   |   Update On 2017-06-24 01:06 GMT
அமெரிக்காவில் தங்களை கடித்த நாயை போலீசார் சுடும் போது குறிதவறி குண்டு தாக்கியதில் பள்ளி மாணவி பரிதாமாக உயிரிழந்தார்.
நியூயார்க்:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாநிலத்தில் நேற்று முன்தினம் நகர போலீசார் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்குள்ள குடியிருப்பு வாசி தான் வளர்க்கும் நாயை சாலையில் அழைத்து வந்துள்ளார். திடீரென, நாய் போலீசார் மீது பாய்ந்து ஒரு போலீசின் காலை பலமாக கடித்தது.

நாயின் உரிமையாளர் நாயை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துள்ளார். இதனால், செய்வதறியாது திகைத்த போலீசார் சட்டென தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் நாயை குறிவைத்து சுட்டனர். ஆனால், குறிதவறி அவ்வழியாக வந்த பள்ளி மாணவி மீது தவறுதலாக குண்டு பாய்ந்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள நகர போலீசார், நடந்த சம்பவம் எதிர்பாராமல் நிகழ்ந்தது என கூறியுள்ளனர்.
Tags:    

Similar News