செய்திகள்

காபுலில் வங்கியை குறிவைத்து கார் வெடிகுண்டு தாக்குதல்: சம்பளம் எடுக்க சென்ற 20 பேர் பலி

Published On 2017-06-22 09:36 GMT   |   Update On 2017-06-22 09:36 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகரான காபுலில், வங்கி அருகே தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில், சம்பளம் எடுக்க வரிசையில் நின்ற 20 பேர் பலியாகினர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டு தலைநகரான காபுலில், வங்கி அருகே தீவிரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில், சம்பளம் எடுக்க வரிசையில் நின்ற 20 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள லஷ்கர் கா வங்கியில் இன்று காலை பொதுமக்கள் பலர் தங்களது சம்பளத்தை எடுக்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது வங்கி முன் நிறுத்தப்பட்டிருந்த வெடிகுண்டுகள் நிரப்பிய கார் திடீரென வெடித்துச் சிதறியது.

இந்த திடீர் தாக்குதலில், வங்கியில் கூடியிருந்த 20 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் 50-க்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.


இதுகுறித்து லஷ்கர் கா மாகாண செய்தி தொடர்பாளர் ஒமர் சாக் கூறுகையில், "இந்த தாக்குதலில் போலீசார், ராணுவத்தினர், அரசு ஊழியர்கள் மற்றும் காபுல் வங்கி ஊழியர்கள் என 20-க்கு மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதில்  தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சமீப காலமாக ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் கூடும் இடங்களில் தலிபான் மற்றும் ஐ.எஸ். அமைப்பினர் திடீர் தாக்குதலில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது அரசை கவலையடைய செய்துள்ளது" என தெரிவித்தார்.
Tags:    

Similar News