என் மலர்
நீங்கள் தேடியது "car bomb blast"
- உமரின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
- உமர் சட்ட விரோத நிதிகள் மூலம் ரூ.20 லட்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி செங்கோட்டை யில் கடந்த 10-ந்தேதி கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். காரில் வெடிபொருட்கள் நிரப்பி தற்கொலை தாக்குதல் நடத்திய டாக்டர் உமர் முகமது பலியானார்.
ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த உமர், அரியானாவின் பரிதாபாத்தில் உள்ள அல் பலாஹ் பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணியாற்றி வந்தார். பரிதாபாத்தில் இருந்து 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டு 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு டெல்லியில் குண்டுவெடிப்பு நடந்தது.
இதற்கிடையே உமரின் கூட்டாளிகளிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில் விசாரணையில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது. டாக்டர் உமர், டெல்லியில் குண்டுவெடிப்புக்கு ஒரு நாள் முன்பு வரை அரியானாவின் நூஹ் நகரில் வாடகை அறையில் தங்கி இருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
அப்போது அவர் பல செல்போன்களைப் பயன்படுத்தி உள்ளார் என்று தெரிவித்தனர். அவரது நெருங்கிய கூட்டாளி டாக்டர் முசாம்மில் ஷகீல்லை போலீசார் பிடித்ததை அறிந்ததும் உமர் பரிதாபாத்தில் உள்ள அல்-பலாஹ் மருத்துவக் கல்லூரியை விட்டு வெளியேறியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் டெல்லியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட குண்டு, அல் பலாஹ் பல்கலைக் ழகத்தில் தயாரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்தனர். இதில் உமர் வெடிபொருட்களை சோதிக்க வீட்டில் ஆய்வகம் வைத்திருந்ததும், டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்து இருப்பதும் தெரியவந்தது.
டாக்டர் உமர் சட்ட விரோத நிதிகள் மூலம் ரூ.20 லட்சம் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பல ஹவாலா வியாபாரிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் உமர் அரியானாவின் நூஹ் நகரில் உள்ள ஒரு சந்தையில் பணம் கொடுத்து அதிக அளவில் உரங்களை வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் டெல்லியில் கார் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்து 9மிமீ தோட்டாக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களும் கண்டு பிடிக்கப்படவில்லை.
பறிமுதல் செய்யப்பட்ட 3 தோட்டாக்களில் ஒன்று மட்டும் வெற்று ஷெல் ஆகும். இந்த 9 மிமீ தோட்டாக்கள் பொதுவாக பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்றன.
இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்த அனைத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஆயுதங்களிலும் பயன்படுத்தப்பட்ட தோட்டாக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் அவர்களின் தோட்டாக்கள் சரியாக இருந்தது.
எனவே குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் பறிமுதல் செய்யப்பட்ட தோட்டாக்கள் பாதுகாப்பு படையினர், போலீசாருக்கு சொந்தமானவை அல்ல என்பது உறுதியானது. இதையடுத்து இந்த தோட்டாக்கள் யாருடையது? என்றும் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தோட்டாக்கள் எப்படி வந்தது? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையில் மேலும் முக்கிய ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. குண்டு வெடிப்புக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு பரிதாபாத் பல்கலைக்கழக வளாகத்திலிருந்து பழைய டெல்லி வரை உமரின் பயணத்தின் புதிய தெளிவான படங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
டெல்லி-என்.சி.ஆரில் உள்ள பல மாவட்டங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் முக்கிய சோதனைச் சாவடி களில் உள்ள 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களில் இருந்த காட்சிகள் மூலம் இந்த படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன.
- சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் டாக்டர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந்தேதி கார் குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் அரியானா மாநிலம் பரிதாபாத்தில் உள்ள அல்பலா பல்கலைக்கழகத்தில் படித்த சிலர் மற்றும் அங்கு பணியாற்றியவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பல்கலைக்கழகம் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
முன்னதாக ஜம்மு காஷ்மீர், அரியானா, உத்தரபிரதேச மாநிலங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 2,900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவங்கள் தொடர்பாக அல்பலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 டாக்டர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக அரியானா மாநிலம் நூ மாவட்டத்தை சேர்ந்த மேலும் 2 டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.
அவர்களில் ஒருவர் அல்பலா பல்கலைக்கழகத்தில் கடந்த 2-ந்தேதி பணி பயிற்சி காலத்தை நிறைவு செய்துள்ளார். மற்றொருவர் அந்த பல்கலைக்கழத்தின் முன்னாள் மாணவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதற்கிடையே டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மருத்துவர்கள் முசாபர் அகமது, அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல், ஷஹீன் சையீத் ஆகியோரது பெயர்கள் தேசிய மருத்துவ பதிவேட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனவே இந்த 4 மருத்துவர்களும் இனிமேல் மருத்துவர்களாக செயல்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
- ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
- காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
டெல்லி செங்கோட்டை அருகே காரில் வெடிபொருள் நிரப்பி வெடிக்க செய்த சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து காரை ஓட்டி வந்தது ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமாவை சேர்ந்த டாக்டர் உமர் முகமது என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். இது தற்கொலை தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லி செங்கோட்டை எதிரே போக்குவரத்து சிக்னலில் நின்ற கார் வெடித்து சிதறிய சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
சிக்னல் அருகே கார் வந்து நிற்பது, பின்னர் வெடித்து சிதறுவது போன்ற காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. கார் வெடித்து சிதறும் போது கடுமையான தீப்பிழம்பு காணப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை 6.50 மணிக்கு செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இந்த சம்பவம் நடந்து உள்ளது. கார் வெடித்து சிதறிய போது சிக்னலில் ஏராளமான வாகனங்கள் நின்று கொண்டிருந்தன. இதனால் 13 பேர் பலியாகி உள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சத்தார் பகுதியில் கலாபாரி என்னும் பிரபல மார்க்கெட் உள்ளது. இங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரில் நேற்று காலை பலத்த சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் தூக்கி வீசப்பட்ட ஒரு பெண் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். 12 கடைகள் சேதம் அடைந்தன.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பகுதியை முற்றுகையிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், காரில் வைக்கப்பட்டிருந்தது மிகவும் சக்தி வாய்ந்த குண்டு என்பதும் அது முன்கூட்டியே வெடித்ததும் தெரியவந்தது.
மார்கெட் திறக்கப்படுவதற்கு முன்பாகவே குண்டு வெடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். #Pakistan #BombBlast






