செய்திகள்

உணவு பொருட்களுக்கான மானியத்தை 50 பவுண்டுகளாக உயர்த்தி எகிப்து அரசு உத்தரவு

Published On 2017-06-21 12:10 GMT   |   Update On 2017-06-21 12:11 GMT
பணவீக்கத்தால் சிக்கி திண்டாடும் எகிப்து நாட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்துக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் உணவு பொருட்களுக்கான மானியத்தை 50 பவுண்டுகளாக உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது.
கெய்ரோ:

எகிப்து நாட்டு அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் புதிய பவுண்டுகள் என்ற நாணய முறையை அறிமுகப்படுத்தியது. இதனால், அந்நாட்டு வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது.

வருமானத்தை மீறிய வகையில் வாழ்க்கை செலவினங்கள் இருப்பதால் இதை சமாளிக்க இயலாமல் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் திண்டாடி வருகின்றனர். குறிப்பாக, கடந்த ஆறுமாத காலத்தில் முந்தைய பண மதிப்பு வெகுவாக குறைந்து, பாதி அளவிலான மதிப்பை எட்டியுள்ளது.

பணவீக்கத்தின் எதிரொலியாக மக்களின் வாங்கும் சக்தி மிக மோசமான அளவுக்கு தாழ்ந்துப் போனதால் ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள தனிநபருக்கும் தேவையான உணவு பொருட்களை வாங்குவதற்கான மாதாந்திர மானியத்தொகையாக 21 டாலர்களை எகிப்து அரசு வழங்கி வருகிறது.

தற்போது, பணவீக்கம் மேலும் அதிகரித்துள்ளதால் இந்த தொகையை உயர்த்தி மாதந்தோறும் 50 டாலர்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 200 ரூபாய்) உணவு பொருட்களுக்கான மானியமாக அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
Tags:    

Similar News