search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நடுத்தர மக்கள்"

    • குளிர்சாதன பெட்டிகள் அதிகரிப்பு
    • 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் ஒரு பெட்டியில் 72 பயணிகள் பயணம் செய்ய முடியும்.

    நாகர்கோவில் :

    கடந்த 2015-ம் ஆண்டு முதல் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் சாதாரண மக்களின் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப புதிய ரெயில்கள் இயக்குவதை மத்திய அரசு படிப்படியாக குறைத்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் ஏதேனும் புதிய ரெயில்கள் இயக்கப்பட்டாலும் அவை முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்டதாக இயக்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.

    இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயில்களுக்கு பதிலாக சாதாரண எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்கப்பட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும். ஆனால் தற்போது உயர்வகுப்பு மக்கள் மட்டும் பயணம் செய்யும் படியாக அதிக கட்டணத்துடன் முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயில்கள் மட்டுமே புதிதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் சிலிப்பர் பெட்டிகளை அகற்றி விட்டு குளிர்சாதன பெட்டிகளை அதிக அளவில் இணைத்து வருகின்றனர்.

    சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு 2006-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் வாராந்திர ரெயிலில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயிலின் பெட்டிகளில் 2-ம் வகுப்பு படுக்கை மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சென்னையில் இருந்து ஜோத்பூருக்கு இயக்கப்படுகிறது. அதற்கு வசதியாக பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது.

    இந்த ரெயிலில் சென்னையிலிருந்து நாகர்கோவில் மார்க்கம் பயணிக்கும் போது 5 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லாத பெட்டிகள் என ஆறு பெட்டிகளை எடுத்து விட்டு 6 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது.

    இவ்வாறு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து குளிர் சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் நிலைக்கு மறைமுகமாக தள்ளப்படுகிறார்கள்.

    தற்போது 2 அடுக்கு படுக்கை பெட்டியில் ஒரு பயணியின் கட்டணம் ரூ.425 ஆகும். மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஒரு பயணியின் கட்டணம் 1110 ரூபாய் ஆகும். இரண்டு பெட்டிகளுக்கும் இடையே உள்ள கட்டண வேறுபாடு 685 ரூபாய் ஆகும்.

    2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் ஒரு பெட்டியில் 72 பயணிகள் பயணம் செய்ய முடியும். ஆனால் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் 64 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

    முன்பதிவில்லாத பெட்டி குறைக்கப்பட்டுள்ளதால், அதில்பயணிக்கும் சுமார் 200 முதல் 500 பயணிகள் பயணம் செய்ய முடியாது. அல்லது அவர்கள் தற்போது உள்ள 3 பெட்டிகளில் இட நெருக்கடிக்கு இடையே வட நாட்டு பயணிகள் போன்று கழிவறையில் உள்ளே இருந்து பயணம் செய்ய வேண்டி உள்ளது.

    ×