செய்திகள்

ஐ.நா. சபையில் யோகா தின கொண்டாட்டம்

Published On 2017-06-21 09:07 GMT   |   Update On 2017-06-21 09:07 GMT
நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா.சபை தலைமை அலுவலகத்தில் சர்வதேச யோகா தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நியூயார்க்:

இந்தியாவின் பாரம்பரியமிக்க யோகா கலையின் பெருமையை உலகில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், சர்வதேச யோகா தினம் கடைப்பிடிக்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடி, ஐ.நா.சபையில் உரையாற்றும்போது வலியுறுத்தினார்.

பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு 170 நாடுகள் தங்களது ஆதரவை அளித்தன. இதைதொடர்ந்து  ஐ.நா.சபை ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஐ.நா.சபை அலுவலகம் கடந்த 18ஆம் தேதி முதல் யோகாசனம் செய்வது போன்ற மின்விளக்கு  அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது.


இதற்கிடையே, 3-வது ஆண்டாக சர்வதேச யோகா தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  நியூயார்க்கில் உள்ள ஐ.நா.சபை தலைமை அலுவலகத்திலும் யோகா தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் ஐ.நா.சபையின் நிரந்தர இந்திய பிரதிநிதி சையத் அகப்ருதின் பங்கேற்று, யோகா தின விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.

இதேபோல் உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள இந்திய தூதரகங்களின் சார்பில் ஆங்காங்கே சிறப்பு யோகாசன நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்றன. 
Tags:    

Similar News