செய்திகள்

மாலி: சுற்றுலா விடுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் - அல் காயிதா ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு

Published On 2017-06-19 22:31 GMT   |   Update On 2017-06-19 22:31 GMT
மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள சுற்றுலா விடுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு அல் காயிதா ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.
பமாகோ:

மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் உள்ள சுற்றுலா விடுதியில் நடைபெற்ற தாக்குதலுக்கு அல் காயிதா ஆதரவு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

ஆப்ரிக்க கண்டத்தின் மேற்கு பகுதியில் உள்ள நாடான மாலியின் தலைநகர் பமாகோவில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் உள்ளன. இங்கு வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அதிகளவில் தங்கியுள்ளனர். நேற்று அந்நகரில் உள்ள பிரபல சுற்றுலா விடுதியான கான்காபா லே காம்பேமெண்ட்டில் ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல்களை நடத்தினர்.

விடுதியின் ஒரு பகுதிக்கு தீ வைத்த தீவிரவாதிகள் பல சுற்றுலா பயணிகளை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்தனர். தாக்குதல் குறித்து தகவலறிந்து விரைந்து வந்த சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளுடன் கடும் சண்டையிட்டு 20 சுற்றுலா பயணிகளை பத்திரமாக மீட்டனர்.

தீவிரவாதிகளின் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், இந்த கோர தாக்குதலுக்கு அல் காயிதா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவு பெற்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 
Tags:    

Similar News