செய்திகள்

அமெரிக்கா: மசூதி அருகே இஸ்லாமிய இளம்பெண் படுகொலை

Published On 2017-06-19 12:09 GMT   |   Update On 2017-06-19 12:09 GMT
அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தில் ரம்ஜான் நோன்புக்கான அதிகாலை உணவை முடித்துவிட்டு வந்த இஸ்லாமிய இளம்பெண் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவின் விர்ஜினியா மாநிலத்தின் ரெஸ்ட்டான் பகுதியில் வசித்துவரும் சில இஸ்லாமிய பெண்கள் தங்களது இருப்பிடத்தின் அருகேயுள்ள 24 மணிநேர உணவகத்தில் ரம்ஜான் நோன்புக்கான அதிகாலை உணவை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக காரில் அவர்களை கடந்துசென்ற ஒரு வாலிபர் மத துவேஷத்துடன் தகாத வார்த்தைகளை கூறி அந்தப் பெண்களை திட்டினார். இதனால் பீதியடைந்த அவர்கள் உயிர் பயத்துடன் அருகாமையில் உள்ள மசூதி மற்றும் உள்ளூர் மக்களுக்கான அனைத்து டல்லாஸ் பகுதி இஸ்லாமிய சங்கத்துக்கு சொந்தமான கட்டிடத்தை நோக்கி ஓடினர்.

அந்த கட்டிடத்துக்குள் நுழைந்த பின்னர் தங்களுடன் சாப்பிட்டவந்த நப்ரா ஹுசைன்(17) என்பவரை காணாமல் திடுக்கிட்டனர். இதுதொடர்பாக, அனைத்து டல்லாஸ் பகுதி இஸ்லாமிய  கிடைத்த தகவலின் அடிப்படையில் விரைந்துவந்த பேர்ஃபேக்ஸ் மற்றும் லவுடன் கவுன்ட்டி போலீசார் மாயமான நப்ரா ஹுசைனை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அருகாமையில் உள்ள ஸ்டெர்லிங் ரிட்ஜ்டாப் சர்க்கிள் என்ற பகுதியில் ஒரு குட்டையின் அருகே காணாமல்போன நப்ரா ஹுசைன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.



அதேவேளையில், சந்தேகப்படும் வகையில் அவ்வழியாக இருசக்கர காரில் சுற்றிவந்த ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அப்போது, இளம்பெண் நப்ரா ஹுசைனை அவர் காரில் கடத்திச் சென்று பேஸ்பால் மட்டையால் அடித்துக் கொன்ற விபரம் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபரின் பெயர் டார்வின் மார்ட்டினெஸ் டோரஸ்(22) என்று தெரியவந்துள்ள நிலையில் மத துவேஷ தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News