செய்திகள்

ஐ.நா.வின் கருப்பு பட்டியலில் மேலும் 15 வடகொரியர்கள் - சீனா எதிர்ப்பு

Published On 2017-06-03 04:36 GMT   |   Update On 2017-06-03 04:36 GMT
வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய, மேலும் 15 நபர்கள் மற்றும் 4 நிறுவனங்களை ஐ.நா.வின் பொருளாதர தடைக்கான கருப்பு பட்டியலில் சேர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன்:

கடந்த ஓராண்டில் மற்றும் சுமார் 9 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஐ.நா சபை ஆகியவை கண்டனங்கள் தெரிவித்தும் வடகொரியா தனது சோதனைகளை நிறுத்தவில்லை. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.

இந்நிலையில், வடகொரியா நடத்தும் ஏவுகணை சோதனைகளுடன் தொடர்புடைய, மேலும் 15 நபர்கள் மற்றும் 4 நிறுவனங்களை ஐ.நா.வின் பொருளாதர தடைக்கான கருப்பு பட்டியலில் சேர்க்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் உந்துதலின் பேரின் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த தீர்மானம் சர்வதேச பயணத்திற்கு தடை, வடகொரிய வரம்பில் உள்ள சொத்துக்கள் முடக்கம் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளது. சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தை தொடர்ந்து இந்த புதிய தடையை தடுத்து நிறுத்தியது. 

வாக்கெடுப்புக்கு பிறகு பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹேலே, “பாதுகாப்பு கவுன்சில் வடகொரியாவுக்கு இன்று தெளிவாக பாடம் புகட்டுகிறது. வடகொரியா ஏவுகணை சோதனையை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” என்றார்.



சீன தூதர் லியு ஜியி கூறுகையில், ”இந்த தீர்மானம் கொரிய தீபகற்பம் மற்றும் வடகிழக்கு ஆசிய பகுதிகளின் அமைதி மற்றும் பாதுகாப்பை வலியுறுத்துகிறது. அதனால் பதட்டத்தை குறைக்கும் வகையில் அமைதியான அரசியல் தீர்வு கொண்டு வரப்பட வேண்டும்” என்றார்.
Tags:    

Similar News