search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐ.நா."

    • வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு வழங்கும்.
    • பல விதங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும்.

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் ஐ.நா. பொதுசபையின் 78-வது கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், வளர்ச்சி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக பேசிய அவர், "இந்த ஆண்டு இறுதி வரையில், நாங்கள் தான் ஜி20-க்கு தலைமையாக இருப்போம். ஜி20 பதவிக்காலம் இருக்கும் போதும், முடிந்த பிறகும், நாங்கள் கூட்டாளியாகவும், பங்களிப்பாளராகவும், கூட்டணி அமைப்பவராகவும் எங்களுக்கே உரிய பாணியில் செயல்படுவோம். இதன் மூலம் மற்றவர்களையும் வளர்ச்சிக்கான சவால்களை எதிர்கொள்ள செய்வதில், நாங்கள் முன்னுதாரணமாக இருப்போம். எங்களது அனுபவங்கள் மற்றும் சாதனைகளை நல்ல விதத்தில் ஊக்கமளிக்கும் வகையில், பகிர்ந்து கொள்வோம்."

    "இவை பல விதங்களில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியும். தெற்கு-தெற்கு ஒத்துழைப்பு விவகாரத்தில், நாங்கள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருந்து இருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஆப்பிரிக்க யூனியனை ஜி20-இல் இணைத்ததை நாங்கள் மேற்கோள் காட்ட விரும்புகிறோம். மேலும், இது தொடர்பான ஒத்துழைப்பு ஜி20-இல் மட்டுமின்றி அதை கடந்தும் தொடரும் என்றே நம்புகிறேன்," என்று அவர் தெரிவித்தார்.

    • மூன்றரை லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உயிர்காக்கும் சிகிச்சை தேவை.
    • இதுரை 528 குழந்தைகள் உயிரிந்துள்ளதாக ஐ.நா.பிரதிநிதி தகவல்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கிற்கு சுமார் ஒரு கோடியே  60 லட்சம் குழந்தைகள் பாதிக்கப் பட்டுள்ளதாக ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றரை லட்சம் குழந்தைகளுக்கு உடனடி உயிர்காக்கும் சிகிச்சை தேவை என்று ஐ.நா.சர்வதேச குழந்தைகள் அவசர நிதிய பிரதிநிதி அப்துல்லா ஃபாடில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 


    வயிற்றுப்போக்கு, டெங்கு காய்ச்சல் மற்றும் தோல் நோய் பாதிப்பு என பல பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று அவர் கூறியுள்ளார். அண்மையில் அந்த பகுதியில் ஆய்வு செய்த அவர், இதுரை 528 குழந்தைகள் உயிரிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.  


    சிறு குழந்தைகள் தங்கள் குடும்பங்களுடன் குடிதண்ணீர், உணவு மற்றும் வாழ்வாதாரம் இல்லாமல் திறந்த வெளியில் வாழ்வதாகவும், வெள்ளத்தால் கட்டிடங்கள், ஆயிரக்கணக்கான பள்ளிகள், நீர்நிலை அமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகள் உட்பட முக்கிய உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு ஏற்பட்ட மழை வெள்ளத்திற்கு 1,545 பேர் உயிரிழந்து உள்ளனர், மேலும் 12,850 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×