செய்திகள்

பிலிப்பைன்ஸ் அதிபரின் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு சீனா முழு ஆதரவு

Published On 2017-05-29 10:41 GMT   |   Update On 2017-05-29 10:41 GMT
போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்துக்கு எதிரான பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ மேற்கொண்டு வரும் அதிரடியான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.
பீஜிங்:

உலக அளவில் போதைப் பொருள் பிரச்சனையால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்று பிலிப்பைன்ஸ். பிலிப்பைன்ஸ் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகம் கொடி கட்டி பறந்து வந்தது. 

இதனையடுத்து, ரோட்ரிகோ டூடெர்ட் கடந்த ஆண்டு அதிபராக பதவியேற்றது முதல் போதைப் பொருள் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. பிலிப்பைன்ஸ் போலீசார் அதிரடியாக நடவடிக்கையை மேற்கொண்டு போதைப்பொருள் ஒழிப்பை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கையில் போலீசாரால் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்களும் எழுந்தது. 

அதிபர் ரோட்ரிகோவின் நடவடிக்கையை ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு நாடுகளும், அமெரிக்காவும் விமர்சனம் செய்து வந்தது. 

இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்துக்கு எதிரான பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ மேற்கொண்டு வரும் அதிரடியான நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று சீனா தெரிவித்துள்ளது.  

முன்னதாக 1,331 பவுண்ட்ஸ் மதிப்பிலான 604 கிலோகிராம் போதைப் பொருட்களை சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகள் கூட்டு நடவடிக்கை மூலம் இன்று பறிமுதல் செய்தனர்.

போதைப் பொருட்கள் ஒழிப்பு தொடர்பாக இருநாடுகளிடையே கடந்த அக்டோபர் மாதம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதாக சீன அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News