செய்திகள்

ஆப்கானிஸ்தான்: ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் - 15 வீரர்கள் பலி

Published On 2017-05-26 12:51 GMT   |   Update On 2017-05-26 12:52 GMT
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான கந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.
காபுல்:

ஆப்கானிஸ்தான் நாட்டில் தீவிரவாத வெறியாட்டத்தில் ஈடுபட்டு வரும் தலிபான் தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டும் நோக்கத்தில் உள்நாட்டு ராணுவத்தினர் உச்சகட்டப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக ‘நேட்டோ’ எனப்படும் பன்னாட்டு படையினரும் போரில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், நாட்டின் தென்பகுதியான கந்தஹார் மாகாணத்திற்குட்பட்ட ஷா வாலி கோட் மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் நடத்திய அதிரடி தாக்குதலில் 15 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானவர்கள் பலியானதாகவும் பலர் காயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதே பகுதியில் உள்ள மற்றொரு ராணுவ முகாமின் மீது கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பத்து ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News