செய்திகள்

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப்பின் நெருங்கிய உதவியாளர் நீக்கம்

Published On 2017-04-30 07:18 GMT   |   Update On 2017-04-30 07:18 GMT
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் வெளியுறவு உதவியாளராக இருந்த தாரிக்பதேமி அப்பதவியில் இருந்து திடீரென அதிரடியாக நீக்கப்பட்டார்.
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பின் வெளியுறவு உதவியாளராக இருந்தவர் தாரிக்பதேமி (72). இவர் நவாஸ் செரீப்புக்கு மிகவும் நம்பிக்கையாக இருந்தார்.

இவர் திடீரென அதிரடியாக நீக்கப்பட்டார். சமீபத்தில் பாகிஸ்தானில் மந்திரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் அடங்கிய பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து தீவிரவாதிகள் நிலைகள் மீது இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அதுபற்றிய செய்திகள் பத்திரிகைகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தகவல்கள் இவர் மூலம் பத்திரிகைகளுக்கு கசிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. குழு நடத்திய விசாரணையில் தாரிக்பதேமி குற்றவாளி என தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து அவர் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். ஏற்கனவே பனாமா ஆவண ஊழல் வழக்கில் சிக்கி தவிக்கும் நவாஸ் செரீப்புக்கு இது ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.

Tags:    

Similar News