செய்திகள்

இந்தியாவிலிருந்து 54 வருடங்களுக்கு பின்னர் சீனா திரும்பிய வீரருக்கு உற்சாக வரவேற்பு

Published On 2017-03-07 18:20 GMT   |   Update On 2017-03-07 18:20 GMT
இந்தியாவில் சுமார் 54 வருடங்களாக வசித்து, தற்போது சொந்த நாடான சீனாவுக்கு திரும்பிய ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
பெய்ஜிங்:

கடந்த 1967-ம் ஆண்டில் இந்தியா - சீனா இடையேயான போரின் போது, வாங் என்ற சீன வீரர் எல்லை தாண்டி இந்தியா வந்ததாக கைது செய்யப்பட்டார். பின்னர், போர் முடிவுக்கு வந்ததும் வாங் விடுதலை செய்யப்பட்டார். ஆனால், அவர் சொந்த நாடு திரும்பாமல் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே வசித்து வந்தார்.



சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னர் தனது சொந்த நாட்டுக்கு செல்ல வேண்டும் என 77 வயதான வாங் விரும்பினார். இதையடுத்து, அவர் சீனா செல்வதற்கான பணிகளை அவரது மகன் செய்து கொடுத்தார். வாங் மற்றும் அவரது குடும்பத்தினர் சீனா செல்லவும், அவர்கள் விரும்பும் போது இந்தியா திரும்பவும் இந்திய அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்தனர்.

இந்நிலையில், சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்ற வாங் குடும்பத்தினரை அக்கிராம மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். தோரணங்கள் கட்டி, வாழ்த்துப் பதாகைகள் வைத்து அக்கிராமத்தை அலங்கரித்து இருந்தனர். வாங் தனது பயணத்தின் போது தன்னுடைய தாயாரின் கல்லரைக்குச் சென்று அஞ்சலி செலுத்த இருக்கிறார்.

Similar News