உள்ளூர் செய்திகள்

கூடுதல் ஆணையர் அன்பு             ராஜசேகர்

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் உயிரிழப்பு- 5 காவலர்கள் சஸ்பெண்ட்

Published On 2022-06-12 15:11 GMT   |   Update On 2022-06-13 01:24 GMT
  • விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்
  • ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார் என தகவல்

சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர் என்பவர் சந்தேகத்திற்கிடமான வகையில் உயிரிழந்துள்ளார்.

குற்ற வழக்குகளில் தொடர்புடையே ராஜசேகரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கைது ராஜசேகர் மரணம் தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஏற்கனவே தலைமை செயலக காலனி காவல்நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:

ராஜசேகர் மீது ஏற்கனவே 27 குற்ற வழக்குகள் உள்ளன. விசாரணையின் போது ராஜசேகருக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. ராஜசேகர் மரணம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரிப்பார்.

ராஜசேகரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தப்படவில்லை. சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்துவது காவல்துறையினரின் கடமை. ராஜசேகர் மரணம் தொடர்பாக 5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News