தமிழ்நாடு

எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை தொடர்ந்து நடத்த வேண்டும்- ஜி.கே.வாசன்

Published On 2022-06-08 07:50 GMT   |   Update On 2022-06-08 07:50 GMT
  • தமிழக அரசு மீண்டும் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை படிக்க வைத்துவிட்டு தொடர் வகுப்பிற்கு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும்.

சென்னை:

த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசு இந்த கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை ரத்து செய்ய முடிவெடுத்து இருப்பது தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக இருக்குமே தவிர ஏழை, ஏளிய மக்களுக்கு அல்ல. அதோடு அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைய அதிக வாய்ப்புள்ளது. தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகளை படிக்க வைத்துவிட்டு தொடர் வகுப்பிற்கு அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்ப்பது என்பது மிகவும் குறைவானதாகவே இருக்கும். இதனால் அரசுப் பள்ளிகளுக்குதான் பாதிப்பு ஏற்படும். இதனால் மிகவும் பாதிக்கப்படுவது ஏழை, எளிய பெற்றோர்களும் மாணவர்களுமே.

ஆகவே ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலையை மனதில்கொண்டும், மாணவர்களின் தொடர் வகுப்புகள் தடைபடாமல் தொடரவும் தமிழக அரசு மீண்டும் அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி. மற்றும் யு.கே.ஜி. வகுப்புகள் தொடர்ந்து நடைபெற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News