தமிழ்நாடு

மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் உயர்வு

Published On 2022-07-07 04:52 GMT   |   Update On 2022-07-07 04:52 GMT
  • பரம்பிகுளம் அணையின் மொத்த நீர்மட்டம் 72 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 48.65 அடியாக உள்ளது.
  • ஆழியாறு அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 91.05 அடியாக உள்ளது.

கோவை:

கோவை மாவட்டத்தில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

சோலையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடி. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 142.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 5,408 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 837.49 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பரம்பிக்குளம் அணையின் மொத்த நீர்மட்டம் 72 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 48.65 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2721 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 127 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ஆழியாறு அணையின் மொத்த நீர்மட்டம்120 அடி. தற்போது அணையின் நீர் மட்டம்91.05 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 814 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 179 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

பவானிசாகர் அணையின் மொத்த நீர்மட்டம் 105 அடி. தற்போது அணையின் நீர்மட்டம் 84.37அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6546 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து 933 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Tags:    

Similar News