செய்திகள்
ரங்கசாமி சாமி தரிசனம் செய்தபோது எடுத்தபடம்.

சேலம் அப்பா பைத்தியம் சாமி கோவிலில் புதுவை ரங்கசாமி மீண்டும் சாமி தரிசனம்

Published On 2021-04-25 05:51 GMT   |   Update On 2021-04-25 05:51 GMT
அரசியல் தலைவர்கள் தேர்தல் நேரத்திலும், முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும் சேலம் அப்பா பைத்தியம் சாமி கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.
சேலம்:

சேலம் சூரமங்கலத்தில் பிரசித்திபெற்ற அப்பா பைத்தியம் சுவாமி கோவில் உள்ளது, புதுவையை சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலர் அவ்வப்போது இங்கு வந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அரசியல் தலைவர்கள் தேர்தல் நேரத்திலும், முக்கிய முடிவுகள் எடுக்கும்போதும் இங்கு வந்து தரிசனம் செய்வார்கள்.

புதுச்சேரி என்.ஆர்.காங்., தலைவர் ரங்கசாமி ஏற்கனவே அப்பா பைத்தியம் சாமி கோவிலில் கடந்த மார்ச் 2-ல் தரிசனம் செய்தார். அதே மாதம் 24-ல் வேட்பாளர் பட்டியலை வைத்து வழிப்பட்டார். நேற்று மாலை காரில் சேலம் வந்த அவர் அப்பா பைத்தியம் சாமி கோவிலில் இரவு 7.30 முதல் 8.30 மணி வரை சாமி தரிசனம் செய்தார். அப்போது மூலவரின் வாயில் சுருட்டு வைத்து காதுகளில் பேசி ஆசி பெற்றார். பின் 20 நிமிடம் தியானம் செய்ததோடு பக்தர்களுக்கு லட்டு, ஜிலேபி, சோன்பப்டி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

இதுகுறித்து ரங்கசாமி பேச மறுத்த நிலையில் அவருடன் வந்த நிர்வாகிகள் கூறியதாவது:-

என்.ஆர்.காங்., தலைமையில் கூட்டணி 100 சதவீதம் வெற்ற பெற்று ஆட்சி அமைக்கும். வெற்றிக்கான உத்தரவு அப்பா பைத்தியம் சாமியிடம் கிடைத்துள்ளது. அடுத்தமுறை முதல்வர் பதவியை ஏற்கும் முன் தரிசனத்துக்கு வருவோம். 

இவ்வாறு அவர்கள் கூறினர். 
Tags:    

Similar News