செய்திகள்
கொரோனா வைரஸ்

ஊழியருக்கு கொரோனா தொற்று: பரவை பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டது

Published On 2021-04-23 09:37 GMT   |   Update On 2021-04-23 09:37 GMT
பரவை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

மதுரை:

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது தமிழகத்திலும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வரும் நிலையில் மதுரை மாவட்டத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

மதுரையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் கோரோனா பரவல் பல பகுதிகளில் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

மதுரை மாவட்டம், பரவை பேரூராட்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து பரவை பேரூராட்சி அலுவலகம் நேற்று முதல் வருகிற 27-ந் தேதி வரை மூடப்பட்டது.கிருமிநாசினி உள்ளிட்ட நோய்த் தடுப்பு மருந்துகளும் தெளிக்கப்பட்டன.

அந்த பகுதியை கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவித்து பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பேரூராட்சி அலுவலகம் மூடப்பட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News